Bible Stories /Story Of Adam And Eve

Bible Stories /Story Of Adam And Eve

The Lord took some clay from the earth and made Adam. 

Then he inhaled his breath into it. 

The man's eyes opened. 

He is alive. 

He named him Adam. 

Adam created a beautiful garden to live in. 

That garden was called the Garden of Eden. 

There were wonderful things in it. 

Beautiful flowers bloomed everywhere. 

The birds sang in the tree. 

Small streams also flowed. 

The beasts began to roam in it

ஆண்டவர் பூமியிலிருந்து சிறிது களிமண்ணை எடுத்து ஆதாமை உருவாக்கினார். பிறகு அதில் தனது சுவாசத்தை செழுத்தினார். அந்த மனிதனின் கண்கள் திறந்தது. அவன் உயிர்பெற்றான். அவனுக்கு ஆதாம் என்று பெயரிட்டார். ஆதாம் வாழ்வதற்கு ஒரு அழகான தோட்டத்தை உருவாக்கினார். அந்தத் தோட்டம் ஏதேன் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. அதில் அற்புதமான விஷயங்கள் இருந்தது. அழகான மலர்கள் எங்கும் பூத்தது. பறவைகள் மரத்தில் கானம் பாடியது. சிறிய ஓடைகளும் பாய்ந்தது. மிருகங்கள் அதில் உலாவத்தொடங்கியது. 

ஆண்டவர் மனிதனை அவரது சிந்தனையிலேயே உருவாக்கினார். அவருக்கு உதவி செய்யவும் உலகத்தைப் பார்த்துக் கொள்ளவும் உருவாக்கினார். அனைத்து மிருகங்களுக்கும் பெயர்சூட்ட ஆண்டவர் அவைகளை ஆதாமிடத்தில் வரச்சொன்னார். 

இருப்பினும் ஆண்டவர் ஆதாமிற்காக வருத்தப்பட்டார். ஆதாமின் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவும் அவன்மீது அக்கறை காட்டவும், அவன் அக்கறை காட்டவும் அவனுக்கு ஒரு துணை தேவை என்று ஆண்டவர் நினைத்தார். 

அன்று இரவு ஆண்டவர் ஆதாமிற்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார். பின்னர் ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார். அவளுக்கு ஏவாள் என்று பெயரிட்டார். ஆதாம் அடுத்த நாள் கண் விழித்தபொழுது அவன் மனைவியைக் கண்டான். ஏவாள் அவனுக்கு அருகிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள். ஆதாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.அவன் அவளுடைய கைகளைத் தொட்டவுடன் அவள் கண்விழித்தாள். ஆதாமின் மகிழ்ச்சியைக் கண்ட ஆண்டவர் மிகவும் சந்தோஷப்பட்டார். 

The Lord created man in His own mind. 

Created to help him and take care of the world. 

The Lord gave names to all the animals and brought them to Adam.



However the Lord was sorry for Adam. 

The Lord thought he needed a companion to share Adam's life, to care for him, and to care for him.



That night the Lord brought Adam into a deep sleep. 

Then he created a woman out of Adam's rib. 

He named her Eve. 

When Adam woke up the next day he saw his wife. 

Eve was sleeping next to him. 

Adam was overjoyed. She woke up as soon as he touched her hands. 

The Lord was very pleased to see the joy of Adam.

பின்பு ஆண்டவர் அவர்களை ஆசிர்வதித்து அவர்களிடம் ஏதேன் தோட்டத்தை பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பையும் கொடுத்து "இந்தத் தோட்டம் முழுவதும் உங்களுக்கே சொந்தம் இந்தத் தோட்டத்திலுள்ள அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம். ஆனால் தோட்டத்தின் நடுவில் உள்ள விருட்சத்தை மட்டும் தொடக்கூடாது. அது நல்லதையும் கெட்டதையும் புரிந்துகொள்ளக்கூடிய ஞானத்தைக் கொடுக்கக்கூடியது அதன்  பழத்தை நீங்கள் சாப்பிட்டால் இறந்துபோவீர்கள்" என்றார். அதற்கு ஆதாமும் ஏவாளும்" நாங்கள் உங்களுக்குக் கண்டிப்பாக கீழ்ப்படிவோம் "என்றார்கள். 

அந்தப்பழத்தை சாப்பிட்டவுடனே ஆதாமும் ஏவாளும் இறந்து விடுவார்கள் என்று ஆண்டவர் கூறவில்லை. அவரின் ஆத்மா அவர்களுடன் இல்லாமல் காலத்தினால் அவர்கள் இறந்துவிடுவார்கள் என்று கூறினார். 

ஒரு நாள் ஏவாள் இரவு உணவிற்காக பழங்களை சேகரித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு வினோதமான குரல் அவளின் பின்னால் ஒளித்தது. இங்கிருக்கும் அனைத்து மரத்தின் கனிகளையும் நீங்கள் சுவைக்கலாம் என்று ஆண்டவர் கூறியிருக்கிறார் அல்லவா!! என்றது அந்தக்குரல். 


ஆமாம் ஏவாளின் பின்னால் இருந்து ஒரு சர்ப்பம் பேசிக்கொண்டிருந்தது. அதைக் கேட்ட ஏவாள் ஆமாம் இங்கு உள்ள எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நாங்கள் புசிக்கலாம். ஆனால் தோட்டத்தின் நடுவில் இருக்கும் விருட்சத்தின் கனியை மட்டும் சாப்பிடக்கூடாது என்றார் என்று ஏவாள் கூறினாள். இதைக்கேட்ட சர்ப்பம் நீ நினைப்பது தவறு இவ்வளவு ருசியான பழம் உங்களுக்கு எந்த கெடுதலும் செய்ய வாய்ப்பே இல்லை ஆண்டவருக்கு நீங்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் நல்லது கெட்டது எது என்று தெரிந்து கொள்வீர்கள் என்று பயம் .இந்தப் பழத்தை நீங்கள் சாப்பிட்டால் உங்களுக்கு சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் திறன் வந்து விடும். எது சரி எது தவறு என்று உனக்கே புரியும். என்று கூறியது. 

ஏவாள் அந்தப் பழத்தைப் பார்த்து அது எவ்வளவு ருசியாக இருக்கும்? என்று நினைத்தாள். ஆண்டவரைப் போல புத்திசாலித்தனமும் பலமும் இருந்தால் எப்படி இருக்கும்?.. முயற்சி செய்து தான் பார்ப்போமே! என்று நினைத்தாள். அவள் சர்ப்பத்தின் பொய்யை நம்பி அந்தப் பழத்தைச் சாப்பிட்டாள்.உடனே அவளுக்கு ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டது. அவளுக்குள் ஒரு பயம் ஏற்பட்டது. தான் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக அவள் புரிந்துகொண்டாள். அவள் இன்னும் சில பழங்களை சேகரித்துக் கொண்டு ஆதாமிடத்தில் ஓடினாள். 

ஆதாமிடத்தில் சென்று இந்தப் பழத்தை சாப்பிட்டுப்பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்று சொல்லி சாப்பிடச் செய்தாள். இருவரும் அந்த பழத்தை சாப்பிட்டுவிட்டு அமைதியாக அமர்ந்து இருந்தார்கள். அந்தப் பழத்தைப் சாப்பிட்ட பின் அவர்களிடத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது. ஆண்டவரிடத்தில் அச்சம் கொண்டார்கள். 

ஆதாமும் ஏவாளும் ஆண்டவர் அவர்களைக் கூப்பிடுவதைக் கேட்டார்கள். உடனே இருவரும் ஒரு புதருக்குள் ஒளிந்து கொண்டார்கள். ஆனால் ஆண்டவர் அவர்களைக் கண்டுபிடித்தார். ஆண்டவர் ஆதாம் ஏவாள் இருவரையும் அழைத்து நான் புசிக்க வேண்டாம் என்று சொன்ன கனியை நீங்கள் இருவரும் புசித்தீர்களா? என்று கேட்டார் அதற்கு அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு ஆதாம் ஏவாள் தான் அந்தக் கனியை தனக்குக் கொடுத்தாள். என்று கூறினான்.அதற்கு ஏவாள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது என்று கூறினாள். இதைக்கேட்ட ஆண்டவர் நான் சொன்ன வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் நீங்கள் இருவரும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும். மேலும் இனிமேல் ஏதேன் தோட்டத்திற்குள் நுழையக்கூடாது என்றும் நீங்கள் இனிமேல் ஆடைகளை நெய்தும் பயிர்களைப் பயிரிட்டும் உங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வாய் உன் வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்திலும் ஏன் குழந்தை பேறு வரை அனைத்திலும் நீங்கள் கஷ்டத்தை அனுபவிப்பீர்கள் என்று கூறி ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பினார்.

என்ன பிரண்ட்ஸ் இந்தப் பதிவில் நாம் கற்றுக் கொண்ட காரியம் என்ன தெரியுமா? நாம் நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்படியும் பொழுது நம் வாழ்வில் ஆசிர்வாதங்கள் நிறைந்து காணப்படும். தேவனுடைய வார்த்தைகளை மறந்து பாவ வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வந்தால் நம் வாழ்வில் சாபம் மட்டுமே இருக்கும். எனவே ஆண்டவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நம் வாழ்வில் ஆண்டவர் நமக்குத்தரும் ஆசிர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வோம்.... 




Post a Comment

0 Comments