Cain Abel Bible Story /காயின் ஆபேல் கதை
Adam and Eve left the Garden of Eden because they sinned.
Within a few years of coming out they had two boys.
The eldest son was Cain. The second son was Abel.
Elder Cain was a farmer.
Abel the younger was shepherding the flock.
Abel loved the Lord very much.
So he took a lamb to sacrifice to the Lord.
Do you know why Abel sacrificed his sheep?
Adam and Eve sinned because they disobeyed the word of the Lord.
To get rid of that sin, they took the lamb and sacrificed it.
Abel did the same, often carrying the lamb and making sacrifices.
Cain the elder did not like Abel. When he saw Abel sacrificing his sheep to the Lord, he offered to the Lord the fruits and vegetables that he had cultivated.
So Cain became angry with Abel.
As a result, Cain killed Abel.
I thought no one had seen Cain kill Abel but the Lord looked at Cain and said, "Where is your brother Abel?"
He asked.
I do not know Cain. Am I his guardian?
He asked.
I know that the Lord killed Abel.
You will be cursed on this earth because you killed your brother Abel.
Cain feared the LORD, and fled from the face of the angel.
Even we sometimes think that no one knows the mistake we make.
But we must act knowing that the Lord our God is watching over our every action.
We must live a life of witness to Him as children dear to the Lord.
Then the Lord will fill us with all kinds of blessings
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ததால் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியே வந்தார்கள். வெளியே வந்த சில ஆண்டுகளில் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள். அதில் மூத்த மகன் பெயர் காயின்.இரண்டாவது மகன் பெயர் ஆபேல் .
மூத்தவனாகிய காயின் ஒரு விவசாயி. இளையவனாகிய ஆபேல் ஆடுகளை மேய்த்து வந்தான். ஆபேலுக்கு ஆண்டவரை மிகவும் பிடிக்கும். எனவே ஆண்டவருக்கு பலி செலுத்த ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு சென்றான். ஆபேல் ஆடுகளை எதற்காக பலி செலுத்தினான் தெரியுமா?
ஆதாமும் ஏவாளும் ஆண்டவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் பாவம் செய்தார்கள். அந்தப் பாவத்திலிருந்து விடுதலை அடையவே ஆட்டுக்குட்டியைக் கொண்டு சென்று பலிசெலுத்தினார்கள். ஆபேலும் அதே போல ஆட்டுக்குட்டியைக் கொண்டு சென்று பலி செலுத்துகிறதை அடிக்கடி செய்து வந்தான்.
மூத்தவனாகிய காயினுக்கு ஆபேலை பிடிக்காது ஆபேல் ஆடுகளை ஆண்டவருக்கு பலி செலுத்துவதைப் பார்த்த காயின் ஆண்டவருக்கு தான் விவசாயம் செய்து எடுத்த காய்களையும் பழங்களையும் ஆண்டவருக்கு பலி செலுத்தினான்.ஆபேலின் காணிக்கையை ஏற்றுக்கொண்ட ஆண்டவர் காயினின் காணிக்கையை ஏற்கவில்லை.
எனவே காயினுக்கு ஆபேலின் மேல் கோபம் வந்தது. அந்தக் கோபத்தின் விளைவு காயின் ஆபேலைக் கொலை செய்தான்.
காயின் ஆபேலைக் கொலை செய்ததை யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தான் ஆனால் ஆண்டவர் காயினைப் பார்த்து உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே? என்று கேட்டார். அதற்கு காயின் எனக்குத் தெரியாது அவனுக்கு நான் காவலாளியா? என்று கேட்டான். அதற்கு கர்த்தர் நீ ஆபேலைக் கொலை செய்ததை நான் அறிவேன். என்று கூறி நீ உன் சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்தபடியால் இந்த பூமியில் சபிக்கப்பட்டிருப்பாய், நீ செய்கிற விவசாயம் நல்ல பலனைக் கொடுக்காது என்றும் சபித்தார். காயின் கர்த்தருக்குப் பயந்து தேவசமுகத்தை விட்டு ஓடினான்.
நாமும் கூட சில சமயங்களில் நாம் செய்கிற தவறு யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் தேவனாகிய கர்த்தர் நம் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். ஆண்டவருக்குப் பிரியமான பிள்ளைகளாக அவருக்கு சாட்சியான வாழ்க்கையை வாழ வேண்டும். அப்பொழுது ஆண்டவர் சகலவிதமான ஆசிர்வாதங்களால் நம்மை நிரப்புவார்.
0 Comments
Thank you for visit my page 🙏