- வேதாகமக் கதைகள்/பூமியில் இராட்சதர்கள்/Bible Stories/Giants on Earth
When people began to multiply on earth many of them did bad things like Cain, but only one was different and that was Enoch.
Enoch was walking with God. All the other people around him were doing very bad things, but Enoch continued to serve God.
The Lord did not let Enoch live among those bad people for a long time. Enoch only lived until he was 365 years old. Enoch was walking with God and disappeared. God took him.
Then the people became more and more evil. Their thoughts were always evil. The earth was full of cruelty.
Genesis 5:21-24, 27;
6:5, 11-13;
Hebrews 11:5;
The
Jude 14,15
How would you feel if a man as tall as the roof of your house was coming towards you?
Wouldn't it be so scary?
Once upon a time there really were such people on earth. They were giants. They were born from the union of sons of gods with sons of men.
But how can that be?
Remember when the evil angel Satan was busy causing problems?
He was trying to corrupt even God's angels. Over time, some of these angels began to listen to everything Satan said. Do you know why they left the work that God had given them in heaven and came down to earth in human form?
Because these sons of God saw the beautiful women on earth and wanted to live with them, the Bible says. Therefore, they came to earth and married those women.
But the Bible says that it is wrong because God created angels to live in heaven.
The children born to the wives of the angels who came to earth were different. In the beginning they may not have been different at all, but gradually they grew tall and mighty and eventually became giants.
These giants were evil. They were so tall and powerful that they made people sing.
They forced everyone to do bad things like themselves. Enoch was not alive at that time, but a good man lived on earth. He always did what God told him to do.
Genesis:6,1-8
Judah: 6
மக்கள் பூமியில் பெருகத் தொடங்கிய போது அவர்களில் பலர் காயீனைப் போல் கெட்ட காரியங்களைச் செய்தார்கள்.ஆனால் ஒருவர் மட்டும் வித்தியாசமானவராக இருந்தார்.அவர்தான் ஏனோக்கு.
ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.அவரைச் சுற்றியிருந்த மற்ற எல்லா மக்களும் படு மோசமான காரியங்களைச் செய்து வந்தார்கள்.என்றாலும் ஏனோக்கு தொடர்ந்து தேவனை சேவித்து வந்தார்.
அந்த கெட்ட மக்கள் மத்தியில் ஏனோக்கு நீண்ட காலம் வாழும்படி கர்த்தர் விட்டுவிடவில்லை.ஏனோக்கு 365வயது வரை மட்டுமே வாழ்ந்தார்.ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில் காணப்படாமற் போனான்.தேவன் அவனை எடுத்துக் கொண்டார்.
பின் அந்த மக்கள் மேலும் மேலும் மோசமானவர்களாக ஆனார்கள்.அவர்களுடைய யோசனையெல்லாம் எப்பொழுதும் கெட்டதாகவே இருந்தது.பூமி கொடுமையால் நிறைந்திருந்தது.
ஆதியாகமம் 5:21-24 , 27; 6:5 , 11-13;
எபிரெயர் 11:5;
யூதா 14,15
உன் வீட்டின் உட்கூரை அளவுக்கு உயரமாக உள்ள ஒரு ஆள் உன் எதிரே வந்து கொண்டிருக்கிறான் என்றால் உனக்கு எப்படியிருக்கும்? மிகவும் பயமாக இருக்கும் அல்லவா? ஒரு காலத்தில் நிஜமாகவே அப்படிப்பட்டவர்கள் பூமியில் இருந்தார்கள்.அவர்கள் தான் இராட்சதர்கள்.தேவகுமாரர் மனுக்ஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால் பிறந்தவர்கள்.
ஆனால் அது எப்படி முடியும்? கெட்ட தூதனான சாத்தான் பிரச்சினைகளை உண்டாக்குவதில் மும்முரமாக இருந்தான் என்பது நினைவிருக்கிறதா? கர்த்தருடைய தூதர்களையும் கூட அவன் கெடுக்க முயன்று கொண்டிருந்தான்.காலப்போக்கில் இந்த தூதர்களில் சிலர் சாத்தான் சொல்வதையெல்லாம் கேட்கத் தொடங்கினார்கள்.பரலோகத்தில் கடவுள் தங்களுக்குக் கொடுத்திருந்த வேலையை விட்டுவிட்டு மனித உருவில் கீழே பூமிக்கு வந்தார்கள் ஏன் தெரியுமா?
ஏனென்றால் கர்த்தருடைய இந்தக் குமாரர்கள் பூமியில் இருந்த அழகிய பெண்களைப் பார்த்து அவர்களோடு வாழ ஆசைப்பட்டார்கள்.என்று பைபிள் சொல்கிறது.எனவே அவர்கள் பூமிக்கு வந்து அந்தப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அது தவறு என்று பைபிள் சொல்கிறது.ஏனென்றால் பரலோகத்தில் வாழ்வதற்காகத்தான் தேவதூதர்களைக் கடவுள் உண்டாக்கியிருந்தார்.
பூமிக்கு வந்திருந்த தூதர்களின் மனைவிகளுக்குப் பிறந்த குழந்தைகள் வித்தியாசமானவர்களாக இருந்தார்கள்.ஆரம்பத்தில் அவர்கள் அப்படியொன்றும் வித்தியாசமானவர்களாக இருந்திருக்க மாட்டார்கள்.ஆனால் போகப் போக அவர்கள் நெடுநெடுவென உயரமாக வளர்ந்து பயங்கர பலவான்களாகி கடைசியில் இராட்சதர்களாக ஆனார்கள்.
இந்த இராட்சதர்கள் கெட்டவர்களாக இருந்தார்கள்.இவர்கள் அவ்வளவு உயரமானவர்களாகவும், பலவான்களாகவும் இருந்ததினால் மக்களைப் பாடாய் படுத்தினார்கள். தங்களைப் போலவே எல்லாரும் கெட்ட காரியங்களை செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள்.அச்சமயத்தில் ஏனோக்கு உயிரோடில்லை.ஆனால் நல்லவர் ஒருவர் பூமியில் வாழ்ந்து வந்தார்.தன்னிடம் கடவுள் எதைச் செய்யச்சொன்னாரோ அதையே அவர் எப்போதும் செய்து வந்தார்.
ஆதியாகமம்:6,1-8
யூதா :6
0 Comments
Thank you for visit my page 🙏