பைபிள் உண்மை என்பதற்கான ஆதாரங்கள்/Evidence that the Bible is true


பைபிள் உண்மை என்பதற்கான ஆதாரங்கள்/Evidence that the Bible is true

 



There are many religions in this world. Each religion has its holy books. But what is the reason that the Bible is the true book? Why should we read it? Why should we believe in it? 

Did the events mentioned in it really happen? 

Does it contain the words of God? 

Or human imagination? 

What is the scientific and historical evidence that the Bible is true? 

We are going to know the answer to all such questions in this post.

1. Archaeological evidence:


The stories, people and places told in the Bible are all fiction, did such people really exist? 

In fact, many people are saying that all of them are not true. But it is not true. The excavation evidence is in favor of the Bible. For example, we have read about King David in the Bible. 

It was written about a king who came from the dynasty of David. From this it was confirmed that David was not a fictional character and many kings came from his dynasty.


In 1906, Hugo Winckler found a stone when he was excavating in Turkey. In it, he saw that it was written about the people of Hittite. It is written about this Hittite in the 3rd verse of Joshua chapter 11 to the Canaanite in the east and west, the Amorite, the Hittite, the Perizzite in the mountains. There is no imagination of the people mentioned in the Bible. 

Actually those people It can be understood that they lived. More excavations have been done on the basis of the Bible than the holy books of other religions. More sources have been found. This is an important evidence that the Bible is true.


2. Scientific facts


Many people believe that religious books do not contain scientific facts. They are only myths and lies. But the Bible contains many scientific facts. These scientific facts were recorded in the Bible centuries before the world discovered them.


Scientists discovered that air has weight in the 1600s, but this fact was recorded in the Bible many centuries earlier. In Job 28:25, he wrote that he assigned to the air its weight.


Engineers discovered in 1844 that ships that can bear heavy weight should be 30 times longer, 5 times wider and 3 times higher. Based on that calculation, they built a ship called Great Britain. In World War II, they built a liberty ship that could bear heavy weight based on the same calculation. But God revealed this calculation to Noah many centuries ago in the Bible.The way you should do it in Genesis -6:15 is that the length of the ark should be three hundred cubits, its width should be fifty cubits, and its height should be thirty cubits. From this we can know that there are many scientific facts in the Bible.


3. Fulfillment of prophecy


Man cannot tell what will happen in the future. Only God can tell. Many things are said in the Bible about what will happen in the future and they are called prophecies. Bible scholars say that 27% of the things in the Bible are prophecies. Let us see some of them. In the Old Testament, there are hundreds of stories about the Messiah who was crushed and died for us. 

There are more prophecies. Where will he be born? 

Where will he grow up? 

How will he serve? 

There are many prophecies about how one will die. We can see that all of these have been fulfilled in the life of Jesus Christ. Mathematicians say that it is impossible for a person to fulfill just 8 of these hundreds of prophecies.Therefore, if hundreds of prophecies have been fulfilled in the life of Jesus Christ, we can understand that it must be God's will.


Just as it is written about the first coming of Jesus Christ, there are prophecies about the second coming of Jesus Christ and the things that will happen in the world before his coming. In Matthew 24, verses 6 and 7, we hear about wars and news of wars. Famines, pestilences, and earthquakes will occur in many places. 

There are also prophecies. We are seeing them all being fulfilled with our own eyes. Epidemic diseases like Corona are affecting the world. Similarly, we are also hearing the news of wars. About what is going on now, the Bible has said 2000 years ago. Not only that, what kingdoms will come and what governments will rule the world. 

Many prophecies have been written about what will happen.


4. The peculiarity of the way the Bible was written 


There are many differences between the way other holy books were written and the way the Bible was written. The Bible was not written by the same person at the same time. The Bible is a collection of sixty-six books written by more than forty writers from different periods. These more than forty writers did not belong to the same place. They did not speak the same language. They did not have the same occupation. 

There are no people who do it. There are no people who belong to the same period. But despite all these differences, what they all say is the same. They have the same opinion. There is no difference of opinion between them.


How is this possible? Let's look at an example.


Moses wrote the first five books in 1400 BC. The Lord used each person in each era of Moses' birth. They also wrote some books. Finally, in the New Testament, in the 100th year after Christ, John wrote the last book, Revelation. There is a gap of almost 1500 years between Moses who wrote the first book and John who wrote the last book. 

lots of writers in the intervening period despite such a gap Although many writers have written in the intervening period, they have all spoken about the same concept. They have written. They spoke about Jesus Christ. There is no difference of opinion among them. This is a special feature of the Bible. How is this possible? God has chosen a person in each era and revealed himself to them. 

.It is not possible in any other way.


5. The Bible is the most translated and most printed book


The first printed book in the world is the Bible. On August 24, 1456, Guten berg invented the printing press. The first book he printed was the Bible. The first printed book in India was also the Bible. That too was printed in the Tamil language. Since then, the most printed and published in the world. 

The book is the Bible. More than 600 million Bibles have been printed so far. The entire Bible has been translated into more than 700 languages. The New Testament alone has been translated into more than 1500 languages. The most translated book is the Bible.God did this so that God's love and His Word would reach everyone. No other book in the history of the world has been printed more or translated more.


Considering all these things, the Bible is a true book. No other book has so many sources. There are no such revelations. Every word in the Bible is from God. God has eternal blessings for those who believe in the things said in this Bible, those who read it, and those who walk according to it. May God give you such blessings! 

Amen..


இந்த உலகில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.அந்தந்த மதங்களுக்கு ஒவ்வொரு புனித நூல்கள் இருக்கின்றன.ஆனாலும் பைபிள் உண்மையான புத்தகம் என்பதற்கு காரணம் என்ன?அதை நாம் ஏன் படிக்க வேண்டும்?அதை நாம் ஏன் விசுவாசிக்க வேண்டும்? அதில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் உண்மையாகவே நடந்ததா? அதில் உள்ளது கடவுளின் வார்த்தைகளா? அல்லது மனிதனின் கற்பனையா? பைபிள் உண்மை என்பதற்கான விஞ்ஞான மற்றும் சரித்திர ஆதாரங்கள் என்னென்ன? என்பதைப் போன்ற எல்லா கேள்விகளுக்கும் விடையை நாம் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.


1.அகழ்வாராய்ச்சி சான்றுகள்:

பைபிளில் சொல்லப்பட்ட கதைகள் , மனிதர்கள்,இடங்கள் எல்லாம் கற்பனையே,உண்மையிலேயே அப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்ந்திருப்பார்களா? உண்மையில் அவைகளெல்லாம் உண்மையில்லை என்று பலரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.ஆனால் அது உண்மையில்லை அகழ்வாராய்ச்சி சான்றுகள்  பைபிளுக்கு சாதகமாகவே இருக்கிறது.உதாரணத்திற்கு பைபிளில் தாவீது இராஜாவைப் பற்றிப் படித்திருப்போம்.பல வருடங்களாக தாவீது ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்று பலரும் சொன்னார்கள்.ஆனால் 1993ஆம் வருடம் இஸ்ரவேலில் Avraham Biran  என்பவர் அகழ்வாராய்ச்சி செய்த பொழுது ஒரு கல் அவருக்குக் கிடைத்தது.அதில் தாவீது வம்சத்தில் வந்த ஒரு இராஜாவைப் பற்றி எழுதியிருந்தது.இதிலிருந்து தாவீது ஒரு கற்பனைக் கதாபாத்திரம் இல்லை என்றும் அவருடைய வம்சத்தில் இருந்து பல இராஜாக்கள் வந்தார்கள் என்று உறுதி செய்யப்பட்டது.

1906இல் Hugo winckler  என்பவர் துருக்கியில் அகழ்வாராய்ச்சி செய்யும் பொழுது ஒரு கல் அவருக்குக் கிடைத்தது.அதில் ஏத்தியரின் மக்களைப் பற்றி எழுதியிருந்ததை பார்த்தார்.இந்த ஏத்தியரைப் பற்றி யோசுவா 11ஆம் அதிகாரம் 3ஆம் வசனத்தில் கிழக்கேயும் மேற்கேயுமிருக்கிற கானானியரிடத்திற்கும்,மலைகளிலிருக்கிற எமோரியர்,ஏத்தியர்,பெரிசியர் எபூசியரிடத்திற்கும் என்று எழுதப்பட்டுள்ளது.இதிலிருந்து பைபிளில் சொல்லப்பட்ட மக்கள் கற்பனை இல்லை. உண்மையில் அந்த மக்கள் வாழ்ந்தார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது.மற்ற மதத்தின் புனித நூல்களை விட பைபிளின் அடிப்படையில் அதிகமான அகழ்வாராய்ச்சிகள் நடந்திருக்கிறது.அதிகமான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது.பைபிள் உண்மை என்பதற்கு இது ஒரு முக்கியமான ஆதாரம்.

2.அறிவியல் உண்மைகள்

மத புத்தகங்களில் அறிவியல் உண்மைகள் இருக்காது.கட்டுக்கதைகளும் பொய்களும்தான் இருக்கிறது என்று பலர் நம்புகின்றனர்.ஆனால் பைபிளில் அநேக அறிவியல் உண்மைகள் உள்ளது.இந்த‌ அறிவியல் உண்மைகள் உலகம் கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காற்றுக்கு எடை இருக்கிறது என்று 1600களில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த உண்மை பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.யோபு-28:25இல் அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து என்று எழுதியிருக்கிறது.


அதிகமான எடையைத் தாங்கக்கூடிய கப்பல்கள் 30மடங்கு நீளமும் 5மடங்கு அகலமும் 3மடங்கு உயரமும் இருக்க வேண்டும் என்று 1844இல்பொறியாளர்கள் கண்டுபிடித்தார்கள்.அந்தக்கணக்கின் அடிப்படையில் கிரேட் பிரிட்டன் என்ற கப்பலைக் கட்டினார்கள்.இரண்டாம் உலகப்போரில் அதே கணக்கின் அடிப்படையில் பெரிய எடையைத் தாங்கக்கூடிய liberty ship ஐக் கட்டினார்கள்.ஆனால் பைபிளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த கணக்கைப் பற்றி தேவன் நோவாவுக்கு வெளிப்படுத்தினார்.ஆதியாகமம் -6:15 இல் நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால்,பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்க வேண்டும்.என்று இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் பைபிளில் அறிவியல் உண்மைகள் ஏராளமாக உண்டு என்று.

3.தீர்க்கதரிசனம் நிறைவேறுதல் 

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப்பற்றி மனிதன் சொல்லமுடியாது.கடவுள் மட்டும் தான் அதை சொல்ல முடியும்.பைபிளில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப்பற்றி அநேகக் காரியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது அதைத் தீர்க்கதரிசனம் என்று சொல்லுகிறார்கள்.பைபிளில் 27%காரியங்கள்தீர்க்கதரிசனங்களாக இருப்பதாக வேத அறிஞர்கள் கூறுகின்றனர்.அவற்றுள் சிலவற்றை நாம் பார்க்கலாம்.பழைய ஏற்பாட்டில் நமக்காக அடிக்கப்பட்டு நொறுக்கப்பட்டு ஜீவனைத் தந்த மேசியாவைக்குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் இருக்கிறது.அவர் எங்கே பிறப்பார்? எங்கே வளருவார்? எப்படி ஊழியம் செய்வார்? எப்படி மரிப்பார் என்பதைப் பற்றி பல தீர்க்கதரிசனங்கள் இருக்கிறது.இவை அனைத்தும் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் நிறைவேறியிருப்பதை ‌‌‌‌‌நாம் பார்க்கலாம்.இந்த நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனத்தில் வெறும் 8ஐ ஒரு நபர் நிறைவேற்றுவதே சாத்தியமில்லாத காரியம் என்று  கணித வல்லுனர்கள் கூறுகின்றனர்.இப்படியிருக்க நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் நிறைவேறியிருக்கிறது என்றால் நிச்சயமாக அது கடவுளின் சித்தமாகத்தான் இருக்க முடியும் என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

எப்படி இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையைப் பற்றி எழுதியிருக்கிறதோ அதே போல இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியும் அவரது வருகைக்கு முன்பாக உலகத்தில் நடக்க இருக்கும் காரியங்களைப் பற்றியும் தீர்க்கதரிசனங்கள் இருக்கிறது.மத்தேயு 24ஆம் அதிகாரத்தில் 6,7 ஆம் வசனங்களில் யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும் கள்.பஞ்சங்களும்,கொள்ளை நோய்களும்,பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். என்றும் தீர்க்கதரிசனங்கள் இருக்கிறது.அவை அனைத்தும் நிறைவேறிக்கொண்டு வருவதை நம்முடைய கண்களால் நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.கொரொனா போன்ற கொள்ளை நோய்கள் உலகத்தில் வதைத்துக் கொண்டு இருக்கிறது.அதே போல யுத்தங்களின் செய்திகளையும் நாம் கேள்விப்படுகிறோம்.இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி 2000வருடங்களுக்கு முன்பே பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.அதுமட்டுமல்ல உலகத்தில் என்னென்ன இராஜ்ஜியங்கள் வரும் என்னென்ன அரசாங்கங்கள் ஆளுகை செய்யும் என்பதைப்பற்றி பல தீர்க்கதரிசனங்கள் எழுதப்பட்டுள்ளது.

4.பைபிள் எழுதப்பட்ட விதத்தின் தனித்தன்மை

மற்ற புனித நூல்கள் எழுதப்பட்ட விதத்திற்கும் பைபிள் எழுதப்பட்ட விதத்திற்கும் பல விதமான வித்தியாசங்கள் இருக்கிறது.பைபிள் ஒரே நபரால் ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டது கிடையாது.வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த நாற்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய அறுபத்தாறு புத்தகங்களின் தொகுப்பு தான் பைபிள்.இந்த நாற்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் ஒரே இடத்தைச் சார்ந்தவர்கள் கிடையாது.ஒரே மொழி பேசுபவர்களும் கிடையாது.ஒரே தொழில் செய்பவர்கள் கிடையாது.ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவர்கள் கிடையாது.ஆனால்இவ்வளவு வேறுபாடுகள் இருந்தாலும் இவர்கள் எல்லோரும் சொல்லும் காரியம் ஒன்றாக இருக்கிறது.ஒரே கருத்தைக் கொண்டதாக இருக்கிறது.இவர்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது.

எப்படி இது சாத்தியம்?ஒரு உதாரணத்தை நாம் பார்க்கலாம்.

மோசே கிமு 1400இல் முதல் ஐந்து புத்தகத்தை எழுதினார்.மோசே பிறந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆண்டவர் ஒவ்வொரு நபரைப் பயன்படுத்தினார்.அவர்களும் சில புத்தகங்களை எழுதினார்கள்.கடைசியாக புதிய ஏற்பாட்டுக்காலத்தில் கிறிஸ்துவுக்குப் பின் 100ஆவது வருடத்தில் யோவான் கடைசிப் புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதினார்.முதல் புத்தகத்தை எழுதிய மோசேக்கும் கடைசிப் புத்தகத்தை எழுதிய யோவானுக்கும் இடையில் கிட்டத்தட்ட 1500வருட கால இடைவெளி இருக்கிறது.இவ்வளவு கால இடைவெளி இருந்தாலும் இடைப்பட்ட காலத்தில் நிறைய எழுத்தாளர்கள் எழுதியிருந்தாலும் அவர்கள் எல்லோரும் ஒரே கருத்தைப் பற்றித்தான் பேசினார்கள்.எழுதியிருக்கிறார்கள்.அது இயேசு கிறிஸ்துவைப்பற்றித்தான் பேசினார்கள்.அவர்களுக்குள் கருத்துவேறுபாடு கிடையாது.இதுதான் பைபிளில் உள்ள ஒரு சிறப்பு.இது எப்படி சாத்தியம்?தேவன் தனக்கென்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தியிருந்தால் மட்டுமே இந்த கருத்து ஒற்றுமை வருவதற்கான சாத்தியம் உள்ளது.வேறெந்த விதத்திலும் இது சாத்தியம் இல்லை.

5.பைபிள் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட அதிகமாக அச்சிடப்பட்ட புத்தகம்

உலகில் முதன் முதலாக அச்சிடப்பட்ட புத்தகம் பைபிள் தான்.ஆகஸ்ட் 24 1456ஆம் ஆண்டு Guten berg printing press ஐக் கண்டுபிடித்தார்.அவர் முதன் முதலில் அச்சிட்ட புத்தகம் பைபிள் தான்.இந்தியாவில் முதன் முதலில் அச்சிடப்பட்ட புத்தகமும் பைபிள் தான்.அதுவும் தமிழ் மொழியில் தான் பைபிள் அச்சிடப்பட்டது.அன்று முதல் இன்று வரை உலகத்தில் அதிகமாக அச்சிடப்பட்டு வெளியிடப்படும் புத்தகம் பைபிள்.600கோடிக்கும் அதிகமாக இதுவரை பைபிள்கள் அச்சிடப்பட்டுள்ளது.700க்கும் மேற்பட்ட மொழிகளில் முழு பைபிள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.புதிய ஏற்பாடு மட்டும் 1500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் பைபிள் தான்.எல்லாருக்கும் தேவனுடைய அன்பும் அவருடைய வார்த்தையும் போய் சேர வேண்டும் என்பதற்காக தேவன் இதைச் செய்தார்.உலக வரலாற்றில் வேறு எந்தப் புத்தகமும் அதிகமாக அச்சிடப்படவும் இல்லை அதிகமாக மொழி பெயர்க்கப்படவும் இல்லை.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது பைபிள் உண்மையான புத்தகம் தான்.வேறு எந்த புத்தகத்திற்கும் இவ்வளவு ஆதாரங்கள் இல்லை.இவ்வளவு வெளிப்பாடுகள் இல்லை.பைபிளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் தேவனிடமிருந்து வந்தது.இந்த பைபிளில் சொல்லப்பட்ட காரியங்களை நம்புகிறவர்களுக்கு, இதைப் படிப்பவர்களுக்கு, இதன்படி நடப்பவர்களுக்கு தேவன் நித்திய ஆசிர்வாதத்தை வைத்திருக்கிறார்.அத்தகைய ஆசீர்வாதங்களை தேவன் உங்களுக்குத் தந்தருள்வாராக! ஆமென்..

Post a Comment

0 Comments