பிறருக்கு உதவி செய்/ Sunday class stories /Help others
The boy who distributes goods from house to house was very hungry. He had no money in hand if he could buy something and eat. He thought that he could ask for something to eat at a nearby house. He knocked on the door of that house.
A woman opened the door. He thought he might ask something. But he was too shy. He didn't feel like asking. "Co... can I have some water to drink?"
He asks reluctantly. She notices the hunger in the boy's eyes. She goes in. Brings a vessel and gives it to him.
After drinking milk, the hungry boy asked..."How much do I owe?"
"Kadana... nothing like that. My mother has said that there is no price for an act of love." She smiled and said." Thank you very much.." The boy passed with a smile.
Years passed. The boy studied medicine and became the greatest doctor in the city. At that time, the girl fell seriously ill.
She was also admitted to the hospital where he worked. Her examination was also done by the same doctor. When he saw the woman's name in the medical report, a small lightning flashed inside him.He quickly went to the ward and saw the woman. It was her. It was the mother he had been starving for. From that day, he treated the woman with all his hard work and attention. After a long treatment, she recovered. It cost several lakhs. The hospital sent a long bill to the woman.
She was stunned as she nervously opened it, wondering how she was going to fix it. On the bottom of the bill was handwritten, "You don't have to pay this bill. Your entire debt is settled on a ship. It's time to give thanks!" Her eyes glazed over. The boy was none other than... America's Greatest Doctor.
It was Dr. Howard Kelly (1858-1943) who explained.
வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு மிகவும் பசித்தது.எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை.அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.அந்த வீட்டின் கதவைத் தட்டினான்.
ஒரு பெண் கதவைத் திறந்தாள்.ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான்.ஆனால் கூச்சம்.கேட்க மனம் வரவில்லை."கொ.... கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?" தயக்கத்துடன் கேட்கிறான்.அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறார்.உள்ளே சென்றாள்.ஒரு கப்பலை கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்..."நான் எவ்வளவு கடன் பட்டிருக்கிறான்?" "கடனா... அப்படி ஒன்றும் இல்லை.அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்."அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்."ரொம்ப நன்றி.." சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான். ஆண்டுகள் கடந்தன.கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்து அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு கொடிய வியாதி வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டாள்.அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது.மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊர் பெயரைப் பார்த்ததும் அவருக்குள் ஒரு சிறிய மின்னல்.விரைவாக வார்டுக்குப் போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார்.அவள் தான்.தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார்.நீண்ட சிகிச்சைக்குப் பின்னர் அவள் குணமானாள்.பல லட்சங்கள் செலவானது.மருத்துவமணை அந்தப் பெண்ணிற்கு ஒரு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது.
இதை எப்படிக் கட்டப் போகிறோமோ என்று பதட்டத்துடன் அதைப் பிரித்தவள் திகைத்துப் போனாள்.அந்தப் பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது."இந்தப் பில்லை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை.ஒரு கப்பலில் உங்கள் கடன் முழுவதும் தீர்க்கப்பட்டுவிட்டது.இது நன்றி சொல்லும் நேரம்!"அவளுக்கு கண்கள் பனித்தன.அந்த சிறுவன் வேறுயாருமல்ல... அமெரிக்காவின் மிகப்பெரிய மருத்துவராக விளங்கிய Dr.Howard Kelly(1858-1943) தான்.

0 Comments
Thank you for visit my page 🙏