What is Amen?/ஆமென் என்றால் என்ன?

 What is Amen?/ஆமென் என்றால் என்ன?



One of the most used words by Christians is the word Amen. Let's look at where the word Amen is used in the Bible.


The word Amen is used at the end of the Lord's Prayer. The word Amen is used at the end of the psalms written by David. The word Amen is used at the end of the Gospels. The word Amen is used at the end of the letters written by Paul. The last word used in the Bible is the word Amen.


The word Amen has two meanings.

1. Genuine, means genuine.


We have translated the word Amen, Amen, I say to you, as verily, verily, I say to you.

2. To be so, to be so. Amen with this meaning is used in the majority of places in the Bible.

For example, if we say Amen at the end of a prayer, we say Amen so that the prayer we are praying is going to happen. Why do they use Amen at the end of the book? They use Amen to mean that the words written in this book and the promises in it are going to happen. 

- According to 3:14 Jesus Christ has the name Amen. Do you wonder why he has the name Amen? All the promises of God are yes in Jesus Christ and in him Amen, so that we may glorify God. 

The only reason is that Jesus Christ died for our sins. Maybe if he didn't die then all the promises would be fulfilled Amen? 

If you ask that, it will definitely not be fulfilled.

To explain more, even a meal of rice that we eat is nothing but Him who shed His blood on the cross of Calvary. What should you do if you want all the Lord's promises to be fully fulfilled in your life, Amen? 

If you ask, the answer is...

The word Amen first appeared in the Bible in the book of Deuteronomy. In any event, the Lord wrote ten words with his own hand and gave them to Moses. That Moses went to the people of Israel and said that if you live according to the words of the Lord, the promises and blessings of the Lord will be fulfilled in your life. When you disobey, the curses will be fulfilled. Then the people said Amen. 

If the Lord's promises are to be fulfilled, obey His words fully in your life. Then the Lord's promises will be fully fulfilled. I will not leave you nor forsake you Joshua -1:5


He will wipe away all your tears - Revelation 7:17


He that trusteth in the Lord shall prosper Proverbs 28:25


We have so many promises. May all these be fulfilled in your life with yes and amen. Amen….

They said.


கிறிஸ்தவர்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளில் ஒன்றுதான் ஆமென் என்ற வார்த்தை.ஆமென் என்ற வார்த்தை வேதாகமத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம்.

பரமண்டல ஜெபத்தின் முடிவில் ஆமென் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.தாவீது எழுதிய பாடல்களின் முடிவில் ஆமென் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.சுவிசேஷப் புத்தகங்களின் முடிவில் ஆமென் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.பவுல் எழுதிய கடிதங்களின் முடிவில் ஆமென் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.வேதாகமத்தில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையும் ஆமென் என்ற வார்த்தைதான்.

ஆமென் என்ற வார்த்தை இரண்டு அர்த்தம் உடையது.

1.மெய்யான, உண்மையான என்ற அர்த்தம் உடையது.

ஆமென், ஆமென், நான் உங்களுக்கு சொல்லுகிறேன்.என்ற வார்த்தையும் மெய்யாகவே, மெய்யாகவே ,நான் உங்களுக்கு சொல்லுகிறேன்.என்று நாம் மொழி பெயர்த்திருக்கிறோம்.

2.அப்படியே ஆகக்கடவது, அப்படியே நடக்கக்கடவது.இந்த அர்த்தமுடைய ஆமென் தான் வேதாகமத்தில் பெரும்பான்மையான இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

உதாரணமாக ஜெபத்தின் முடிவில் நாம் ஆமென் என்று சொல்லுகிறோம் என்றால் நாம் ஜெபிக்கிற ஜெபம் அப்படியே நடக்கக்கடவது என்பதற்காகத் தான் ஆமென் சொல்லுகிறோம்.புஸ்தகத்தின் முடிவில் ஏன் ஆமேன் பயன்படுத்துகிறார்கள் என்றால்,இந்த புஸ்தகத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளும் அதிலுள்ள வாக்குத்தத்தங்களும் அப்படியே நடக்கக்கடவது என்பதற்காக ஆமென் என்று பயன்படுத்துகிறார்கள்.உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும்,தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது ,வெளி-3:14 ‌‌ன் படி இயேசு கிறிஸ்துவுக்கு ஆமென் என்ற நாமம் உண்டு.ஏன் அவருக்கு ஆமென் என்ற நாமம் இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா?எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும்,அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே,2கொரிந்தியர்_1:20 ஆம் உங்கள் வாழ்க்கையிலும் ஆமென் என்று ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களெல்லாம் நிறைவேறுவதற்கான ஒரே காரணம் இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்ததுதான் ஒரே காரணம்.ஒருவேளை அவர் மரிக்கவில்லை என்றால் ஆமென் என்று எல்லா வாக்குத்தத்தங்களும் நிறைவேறுமா? என்று கேட்டால் ‌‌நிச்சயமாக நிறைவேறாது.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நாம் சாப்பிடுகின்ற ஒரு வேளை அரிசி கூட அவர் கல்வாரி சிலுவையில் இரத்தம் சிந்தினதினால் கிடைத்தது தானே தவிர வேறு ஒன்றுமில்லை.ஆண்டவருடைய எல்லா வாக்குத்தத்தங்களும் பூரணமாக உங்கள் வாழ்க்கையில் ஆமென் என்று நிறைவேற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டால் அதற்கான பதில்...

வேதாகமத்தில் முதன்முதலாக ஆமென் என்ற வார்த்தை உபாகமம் புஸ்தகத்தில் தான் இடம்பெற்றது.எந்த‌சம்பவத்தில் என்று பார்த்தால் ஆண்டவர் தன்னுடைய சொந்த கையினால் பத்து வார்த்தைகளை எழுதி மோசேக்கு கொடுத்தார்.அந்த மோசே இஸ்ரவேல் மக்களிடம் சென்று ஆண்டவருடைய வார்த்தைகளின்படி வாழ்ந்தீர்கள் என்றால் ஆண்டவருடைய வாக்குத்தத்தங்களும் ஆசீர்வாதங்களும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும்.மீறி நடக்கும்போது சாபங்கள் நிறைவேறும் என்று கூறினார்.அப்பொழுது மக்கள் ஆமென் என்று சொன்னார்கள்.

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேற வேண்டும் என்றால், அவருடைய வார்த்தைகளை உங்களுடைய வாழ்க்கையில் முழுமையாக கடைபிடியுங்கள்.அப்பொழுது ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் பூரணமாக நிறைவேறும்.நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை யோசுவா -1:5

அவர் உங்கள் கண்ணீர்யாவையும் துடைப்பார் -வெளி 7:17

கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் நீதி 28:25

இப்படித் திரளான வாக்குத்தத்தங்கள் நமக்கு இருக்கிறது.இவை யாவும் உங்கள் வாழ்க்கையில் ஆம் என்றும் ஆமென் என்றும் நிறைவேறட்டும்.ஆமென்.... 

Post a Comment

0 Comments