Love doesn't get angry/Story/அன்பு சினமடையாது
Love covers a multitude of sins. When sins are covered there is no room for hatred or anger. There is no room for strife or division. Love rules divinely.
A parent gave their daughter in marriage to a rich son. But he was also a brute. One morning he got angry with his wife and kicked her and left. Then did she die? Did she survive?
After a few hours to know that, he came slowly and entered the house. Then he was amazed to see his wife preparing food for him.
"You have come on time," she said with a smile, holding his hand and making him sit down to eat. After a moment of silence, he said, "I beat you too much, didn't I?" She said, "No, you didn't beat me, you beat yourself. That day, when I handed my hand over to you in the church, my whole body
You own it.
God has clearly said that 'the wife is not the authority over her own body; the husband is the authority over it' (1 Corinthians 7:4). You are the head that God gave me and I am your property.No matter what you do, God has not given me anyone else to love in this world except you."
Hearing what she said, he wept bitterly. From that day on, the family was bound by deep love. A man who carries out his sin with love will always be victorious in all situations.
Love does not do evil to others;
Therefore love is the fulfillment of the law" (Romans 13:10).
அன்பு திரளான பாவங்களை மூடும்.பாவங்கள் மூடப்படும் போது வெறுப்புக்கோ,கோபத்துக்கோ அங்கே இடமில்லை.சண்டைக்கோ பிரிவினைக்கோ அங்கே பேச்சே இல்லை.அன்பு தெய்வீக ஆளுகை செய்யும்.
ஒரு பெற்றோர் தங்கள் மகளை செல்வம் நிறைந்த ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.ஆனால்,அவனோ மிருக குணம் படைத்தவனாய் இருந்தான்.ஒருநாள் காலை அவன் மனைவியிடம் கோபப்பட்டு அவளை அடித்து உதைத்து விட்டுப் போய் விட்டான்.பிறகு அவள் செத்தாளா?பிழைத்தாளா? என்று அறிய சில மணி நேரம் கழித்து மெதுவாக வந்து வீட்டில் நுழைந்தான்.அப்பொழுது மனைவி அவனுக்காக சாப்பாடு செய்து வைத்திருப்பதைக் கண்டு பிரமித்து நின்றான்.
"சமயத்தில் வந்துவிட்டீர்களே என்று புன்னகையுடன் கூறிக்கொண்டு கையைப்பிடித்து சாப்பிட உட்கார வைத்தாள்.அவன் சிறிது அமைதிக்குப் பிறகு,"நான் உன்னை அதிகமாக அடித்து விட்டேன் இல்லையா?"என்றான்.அதற்கு அவள்"இல்லை என்னை நீங்கள் அடிக்கவில்லை, உங்களைத்தான் அடித்தீர்கள்.அன்று ஆலயத்தில் தேவசமூகத்தில் என் கையை உங்கள் கையில் ஒப்புவித்த போதே என் உடல் முழுவதும் உங்களுக்கு சொந்தமாகி விட்டது.
தேவனும் 'மனைவியானவள் தன் சுய சரீரத்திற்கு அதிகாரியல்ல;புருஷனே அதற்கு அதிகாரி 'என்று தெளிவாகக் கூறியிருக்கிறார்.(1கொரிந்தியர்.7:4).தேவன் எனக்குத் தந்த தலை நீங்கள் நான் உங்கள் உடைமை.என்னை அடிக்கவோ,மிதிக்கவோ உங்களுக்கு உரிமை உண்டு.நீங்கள் என்ன செய்தாலும் எனக்கு இந்த உலகில் நேசிக்க உங்களைத் தவிர வேறு யாரையும் தேவன் எனக்குத் தரவில்லையே"என்றாள்.
அவள் பேசினதைக் கேட்ட அவன் மனங்கசந்து அழுதான்.அன்று முதல் அந்தக் குடும்பம் ஆழமான அன்பினால் கட்டப்பட்டு எழும்பியது.எந்த ஒரு மனுஷன் சினத்தை அன்பினால் மேற்கொள்ளுகிறானோ,அவன் எப்பொழுதும் எல்லா சூழ்நிலைகளிலும் ஜெயங்கொள்ளுகிறவனாகவே இருப்பான்.
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது"(ரோமர் 13:10).

0 Comments
Thank you for visit my page 🙏